search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மாதம் ரூ.7,500 நிவாரணம் கேட்டு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

    மாதம் ரூ.7,500 நிவாரணம் கேட்டு திருச்சியில் 80 இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திருச்சி:

    கொரோனா ஊரடங்கால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 6 மாத காலத்திற்கு குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம்(சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அதன்படி திருச்சி மாநகரில் 80 ஆட்டோ நிறுத்தங்களில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரன், பொதுச்செயலாளர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் அன்புசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி ஜங்ஷன் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளர் ஜான் பல்டோனா தலைமை தாங்கினார். மாநிலக்குழு செயலாளர் பக்ரூதீன் பாபு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொறுப்பாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். திருச்சி கோரிமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 6 மாத காலத்திற்கு குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். ஆட்டோக்களுக்கு எப்.சி., இன்சூரன்ஸ், பெர்மிட் முடிந்த நாளில் இருந்து ஒரு ஆண்டு காலத்திற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும். வாகனங்களுக்கான சாலைவரியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    Next Story
    ×