search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டபோது எடுத்த படம்.
    X
    திருவாரூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டபோது எடுத்த படம்.

    திருவாரூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - கலெக்டர் வெளியிட்டார்

    திருவாரூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஆனந்த் வெளியிட்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்கு 7 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 108 வாக்குச்சாவடிகள் மற்றும் 4 நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 168 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பார்வைக்காக வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆனந்த் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கு 53 வாக்குச்சாவடிகளும், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளுக்கு 67 வாக்குச்சாவடிகளும், கூத்தாநல்லு£ர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு 24 வாக்குச்சாவடிகளும், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு 24 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளுக்கு 12 வாக்குச்சாவடிகளும், குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், கொரடாச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், நீடாமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கு 21 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வெளியிடப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து தேர்தல்) கிரு‌‌ஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×