என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  கூடலூரில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடலூரில் இன்று அதிகாலை 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  ஊட்டி:

  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கருவாரக்குன்னு அருகே உள்ளது நீலம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் அக்ரம் முகமது (வயது 32). இவர் சமீபத்தில் புதிய கார் வாங்கினார்.

  தனது 2 நண்பர்களுடன் நேற்று இரவு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டார். கார் இன்று அதிகாலை 3 மணிக்குமேல் கூடலூர் அருகே வந்தது. அங்குள்ள வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் இருந்து குடியிருப்பு பகுதியில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு தூங்கிய குடியிருப்புவாசிகள் எழுந்து பார்த்தபோதுசம்பவ இடத்திலேயே அக்ரம் முகமது பலியானார். 2 நண்பர்கள் காயங்களுடன் கிடந்தனர்.

  இது குறித்து கூடலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான அக்ரம் முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×