search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் அருகே குப்பை - நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
    X

    கோவில் அருகே குப்பை - நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

    கோவில் அருகே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Highcourt

    சென்னை:

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் மேற்கு சுற்று சுவர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் பூந்தமல்லி நகராட்சி குப்பைகளை கொட்டி வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே, குப்பைகளை அகற்ற உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அடங்கிய அமர்வு, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அதிகாரி, திருவேற்காடு நகராட்சி ஆணையர், கருமாரியம்மன் கோவில் செயல் அதிகாரி ஆகியோர் வருகிற 13-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    Next Story
    ×