search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 547 ரஜினி மன்றங்களை பதிவு செய்ய ஏற்பாடு
    X

    குமரி மாவட்டத்தில் 547 ரஜினி மன்றங்களை பதிவு செய்ய ஏற்பாடு

    நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கபோவதாக அறிவித்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 547 ரசிகர் மன்றங்களை பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் அமலன் கூறியதாவது:-

    அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளது இளைஞர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்று மக்கள் நினைத்திருந்த நிலையில் தலைவர் ரஜினிகாந்த் அரசியலில் குதித்துள்ளார்.

    மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் கால் வைத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவளித்துள்ளனர்.

    ரஜினிகாந்த் தனி இணையதளம் தொடங்கி ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களும் உறுப்பினராக சேர்க்க அழைப்பு விடுத்துள்ளார். குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் 1978-ம் ஆண்டு ரசிகர் மன்றத்தை தொடங்கினோம். 1987-ல் தலைமை ரஜினிகாந்த் ரசிகர்மன்றம் உருவாக்கப்பட்டது. தற்பொழுது மாவட்டம் முழுவதும் 547 ரசிகர் மன்றங்கள் உள்ளது. இதில் 112 பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள் உள்ளது.

    ஒவ்வொரு ரசிகர் மன்றத்திலும் 25 முதல் 50 ரசிகர்கள் வரை உறுப்பினர்களாக உள்ளனர். மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் முதல்கட்டமாக தலைவர் ரஜினிகாந்த் தொடங்கி உள்ள இணையதளத்தில் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தலைமை என்ன கட்டளையிடுகிறதோ அதற்கு ஏற்றவாறு பணியாற்றுவோம்.

    குமரி மாவட்டத்தில் ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும் ரஜினிகாந்திற்கு ஆதரவளித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×