search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிப்பட்டி பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை
    X

    வாடிப்பட்டி பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை

    மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
    வாடிப்பட்டி:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அது வடக்கு, வடகிழக்கு பகுதியில் நகர்ந்து பர்மா அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    மதுரை மாவட்டத்தில் சில மாதங்களாக மழை இல்லாததாலும் கோடை வெப்பம் கொளுத்துவதாலும் ஏரி, கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை வாடிப்பட்டி அருகே சிறுமலை பகுதியில் மேகங்கள் திடீர் என்று ஒன்று திரண்டு சூரிய கதிர்களை மறைத்தன. மேலும் மிதமாக தொடங்கி சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை, பெய்தது. இந்த மழை சிறுமலை கிராமங்கள், குலசேகரன்கோட்டை, விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி பகுதியிலும் வாடிப்பட்டி பஸ் நிலையம் மற்றும் நகர்ப்புறங்களில் மட்டும் பெய்தது.

    ஒருமணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழ்நிலை உருவானது. மேலும் தாதம்பட்டி மந்தை, சந்தை, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
    Next Story
    ×