search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும்: சங்க தலைவர் அறிவிப்பு
    X

    கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும்: சங்க தலைவர் அறிவிப்பு

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறும் அன்றைய தினத்தில் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என்று மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. கடையடைப்பு போராட்டத்தில் கோயம்பேடு வியாபாரிகள் பங்கேற்கவில்லை. அன்று வழக்கம்போல காய்கறி கடைகள் செயல்படும். இதுகுறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்திர ராஜன் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. காய்கறிகள் அத்தியாவசிய தேவையாக கருதப்படுவதோடு அவை அழுகும் பொருட்களாவதால் வியாபாரிகளுக்கு பெருமளவுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால் இந்த கடையடைப்பு போராட்டத்தில் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கலந்து கொள்ள இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 1,700 காய்கறி மொத்த வியாபாரிகள் உள்ளனர். காய்கறி கடைகள் அனைத்தும் அன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல கோயம்பேடு பழக்கடை வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

    சென்னையில் உள்ள ஓட்டல்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருகிறதா என்று ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ரவியிடம் கேட்டதற்கு இதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. வணிகர் சங்கத்தின் ஆலோசனையை பெற்று தான் முடிவு செய்ய வேண்டும்.

    மே 5-ந்தேதி வணிகர் தினத்திற்காக கடைகளை அடைக்க வேண்டும் என்று வணிகர் சங்கம் வற்புறுத்தியுள்ளது.

    விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஓட்டல்களை அடைக்கவா? வணிகர் தினத்திற்கு அடைக்கவா? என்பதை சங்க நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.
    Next Story
    ×