search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் 179 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன
    X

    வேலூர் மாவட்டத்தில் 179 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வேலூர் மாவட்டத்தில் இன்று 179 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் என 2 கோட்டங்களாக டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    வேலூர் கோட்டத்தில் 144 மதுக்கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 71 கடைகளும் என வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 215 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே 2 முறை தலா 500 மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அப்போது வேலூர் கோட்டத்தில் 21 மதுக்கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 13 கடைகளும் மூடப்பட்டன.

    இந்த நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 500 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி வேலூர் கோட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 38 கடைகள், மாநில நெடுஞ்சாலையில் உள்ள 70 கடைகள் என 108 மதுக்கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 9 கடைகள், மாநில நெடுஞ்சாலையில் உள்ள 62 கடைகள் என மொத்தம் 71 கடைகளும் மூடப்பட்டன. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் 179 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
    Next Story
    ×