search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.25 கோடி மோசடி: தலைமறைவானவர் மதுரையில் கைது
    X

    ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.25 கோடி மோசடி: தலைமறைவானவர் மதுரையில் கைது

    திருத்தணியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.25 கோடி மோசடி செய்து தலைமறைவானவர் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    திருத்தணி சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். தனியார் அரிசி ஆலையில் வேலை செய்து வந்துள்ளார்.

    அத்துடன் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் உடன் வேலை செய்பவர்கள் என பலரை சேர்த்து ஏலச்சீட்டு ஆரம்பித்து கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார்.

    நாளடைவில் ஏலச்சீட்டில் அதிகப்படியான நபர்கள் சேரவே 50 ஆயிரம் முதல் 1 லட்சம், 2 லட்சம் என பலதரப்பட்ட ஏலச்சீட்டுகளை நடத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீட்டு எடுத்தவர்களுக்கும் பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். அதே போல் 30-க்கும் மேற்பட்டோரிடம் 45 லட்சம் கடனாகவும் பணம் பெற்றுள்ளார்.

    நாளடைவில் பிரச்சினைகள் அதிகமாகவே சீட்டு எடுத்தவர்கள், மற்றும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.

    இதனால் கடந்த ஜனவரி மாதம் மாரியப்பன் குடும்பத்துடன் தலைமறைவானார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளுர் போலீஸ் சூப்ரெண்ட் சாம் சன்யிடம் புகார் அளித்தனர்.

    கொடுத்த புகாரையடுத்து போலீஸ் சூப்ரெண்ட் உத்தரவுவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்ரெண்ட் காதர் பாஷா, வழக்குப் பதிவு செய்து மாரியப்பனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் மாரியப்பன் மதுரையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் விசு மற்றும் போலீசார் மதுரையில் மறைந்திருந்த மாரியப்பனை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×