search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு அடியோடு நிறுத்தம்
    X

    ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு அடியோடு நிறுத்தம்

    ரே‌ஷன் கடைகளில் தற்போது புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகிறது. உளுந்தம்பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரே‌ஷன் கடைகளில் விலையில்லா அரிசி மற்றும் கோதுமை, சர்க்கரை போன்றவை வினியோகிக்கப்படுகிறது.

    சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

    ஏழை, எளிய மக்கள் பருப்பு விலையேற்றத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு கிலோ பருப்பு வகைகள் ரூ.30-க்கும், பாமாயில் ரூ.25-க்கும் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட்ட பருப்பு வகைகள், பாமாயில் திடீரென நிறுத்தப்பட்டது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டதால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பொது மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த பருப்பு, பாமாயிலை மீண்டும் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இதையடுதுது அரசு அதிரடி நடவடிக்கை எடுத்ததின் பேரில் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து பருப்பு, பாமாயில் விற்பனை செய்யப்பட்டன.

    இதற்கான டெண்டர் விடப்பட்டு பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டன. உணவுத்துறை மூலம் அனைத்து ரே‌ஷன் கடைகளுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் மட்டும் அனுப்பப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் உளுந்தம் பருப்பு வழங்கப்படவில்லை. 3 மாதமாக உளுந்தம்பருப்பு வழங்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. புதிதாக விடப்பட்ட டெண்டரிலும் உளுந்தம் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை.


    தற்போது ரே‌ஷன் கடைகளில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகிறது. உளுந்தம்பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “துவரம் பருப்பு 60 சதவீதமும், உளுந்து 40 சதவீதமும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ரே‌ஷன் கடைகளில் உளுந்து வழங்குவதில் முறைகேடு நடப்பதால் 100 சதவீதமும் துவரம் பருப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டு 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு மட்டுமே தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது” என்றார்.
    Next Story
    ×