search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,584-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.152 குறைந்தது ரூ.22 ஆயிரத்து 584-க்கு விற்பனை ஆகிறது.

    கடந்த பிப்ரவரி 26-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 904 ஆக இருந்தது. இதை தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது.

    நேற்று முன்தினம் பவுன் ரூ.22 ஆயிரத்து 752 ஆக இருந்தது. நேற்று ரூ.16 குறைந்தது ரூ. 22 ஆயிரத்து 736-க்கு விற்றது. இன்று பவுனுக்கு மேலும் ரூ. 152 குறைந்துள்ளது.

    ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 584 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ 19 குறைந்தது. ஒரு கிராம் ரூ. 2, 823-க்கு விற்கிறது. பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு சர்வதேச விலை நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 45.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×