search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: சசிகலா பேனர்கள் கிழிப்பு
    X

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: சசிகலா பேனர்கள் கிழிப்பு

    தேனி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒரு சில இடங்களில் சசிகலா பேனர்கள் கிழிக்கப்பட்டன.
    பெரியகுளம்:

    முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக கூறியதையடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, கம்பம், கூடலூர், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், தேவாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அ.தி.மு.க நகர செயலாளர் ராதா, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் அப்துல்சமது ஆகியோர் தலைமையில் திரண்டனர். அவர்கள் சசிகலாவுக்கு எதிராகவும், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் கோசமிட்டனர்.

    பின்னர் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்களை கிழித்து தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசு வெடித்தனர். காந்தி சிலை, அம்பேத்கார் சிலை, புதுபஸ்ஸ்டாண்டு, உள்ளிட்ட பகுதிகளுக்கு கோசமிட்டவாறு ஊர்வலமாக சென்றனர். அப்பகுதியில் இருந்த சசிகலா பேனர்களை கிழித்தனர்.

    பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் அவரது ஆதரவாளர்கள் பஸ்நிலையம் அருகே திரண்டு சசிகலாவுக்கு எதிராக கோசமிட்டனர். பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பட்டாசு வெடித்தனர். தேவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனரை கிழித்து எரிந்தனர்.


    தேனி நேரு சிலை அருகே பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து பட்டாசு வெடித்து சசிகலாவுக்கு எதிராக கோசமிட்டனர். அப்போது அங்கு வந்த சசிகலா ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி களைந்து செல்ல வைத்தனர்.

    கம்பம் நாராயணதேவன்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்று பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு எதிராக கோசமிட்டனர்.
    Next Story
    ×