search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் ஆதார் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை
    X

    தேனி மாவட்டத்தில் ஆதார் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

    தேனி மாவட்டத்தில் ஆதார் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதமும் ஓராண்டு வரை சிறைதண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் ஆதார் சேர்க்கை பணி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் வாயிலாக நிரந்தர சேர்க்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. நிரந்தர சேர்க்கை நடைபெறும் புதிய ஆதார் பதிவிற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இது ஒரு கட்டணமில்லா சேவையாகும்.

    ஆனால் தனி நபர்கள் சிலர் விரைவாக ஆதார் எண் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிப்பதாகத் தெரியவந்துள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழிமுறைகளை வகுத்துள்ளது.

    இந்த வழிமுறைகளின்படி, பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நபர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கவும், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் ஆதார் எண்ணைப் பெற தமிழக அரசு நிறுவனங்களால் மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நிர்வகிக்கப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களை மட்டுமே நேரில் அணுகி பயன் பெறலாம்.

    Next Story
    ×