search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் முறையாக புதுவையில் ஜல்லிக்கட்டு 12-ந்தேதி நடக்கிறது
    X

    முதல் முறையாக புதுவையில் ஜல்லிக்கட்டு 12-ந்தேதி நடக்கிறது

    புதுச்சேரியில் முதல் முறையாக வருகிற 12-ந்தேதி லாஸ்பேட்டை தாகூர்கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் புவனேஸ்வரன், செயலாளர் லெனின்துரை ஆகியோர் இன்று கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சில அமைப்புகள் கோர்ட்டு மூலம் தடை பெற்றது. இந்த தடையை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழகஅரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது.

    மேலும் மத்திய அரசும் காளையை காட்சி பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து புதுவையில் ஜல்லிக்கட்டு பேரவை என்ற அமைப்பை தொடங்கி உள்ளோம். இந்த பேரவையின் சார்பில் முதல் முறையாக வருகிற 12-ந்தேதி லாஸ்பேட்டை தாகூர்கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை ஜல்லிக்கட்டு திருவிழாவை நடத்த உள்ளோம்.

    இந்த ஜல்லிக்கட்டு விழாவில் தமிழகத்தில் இருந்து காளைகளும் வீரர்களும் பங்கேற்கிறார்கள். புதுவையில் காளை வளர்ப்போரும் போட்டியில் பங்கேற்கலாம். அதோடு தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளான வழுக்குமரம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    போட்டியை நடத்த புதுவை அரசிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம். ஜல்லிக்கட்டு போட்டியை புதுவை மாவட்ட கலெக்டர் சத்யேந்தர்சிங் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியை ஆண்டு தோறும் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×