search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவொற்றியூர் பாரதிநகரில் கடலில் பரவிய எண்ணெயை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட காட்சி
    X
    திருவொற்றியூர் பாரதிநகரில் கடலில் பரவிய எண்ணெயை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட காட்சி

    கடலில் பரவிய எண்ணெயை அகற்றும் பணி 5-வது நாளாக தீவிரம்

    எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டீசல் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்து, டீசல் கடலில் கொட்டியது. கடலில் பரவிய எண்ணெயை அகற்றும் பணி 5-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    திருவொற்றியூர்:

    எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 27-ந் தேதி இரவு ஈரான் நாட்டு கப்பல் எரிவாயுவை இறக்கி விட்டு திரும்பிக் கொண்டிருந்தது.

    அப்போது மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூர் வந்த டான் காஞ்சீபுரம் என்ற கப்பல் மீது மோதியது.

    இதில் டான் காஞ்சீபுரம் கப்பல் சேதமடைந்து அதில் இருந்த டீசல் கடலில் கொட்டியது. இந்த டீசல் எண்ணூரில் இருந்து மெரினா, திருவான்மியூர் வரை பரவி கிடக்கிறது.

    தாழ்வு பகுதியான திருவொற்றியூர், பாரதியார் நகர் அருகே அதிக அளவில் டீசல் படிந்து இருக்கிறது. இதனால் ஆமைகள் இறந்து கரையோரம் மிதக்கிறது.

    கடலில் மிதக்கும் டீசல் படிமத்தை அகற்றும் பணியில் கடலோர காவல்படை (சுற்றுச்சூழல்) அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆனால் டீசல் படிமத்தை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான 5 கழிவுநீர் உறிஞ்சும் சூப்பர் சக்கர் பாலகன் மூலம் டீசல் படிமத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    திருவொற்றியூரில் இன்று 5-வது நாளாக எண்ணெய் படிமத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 2 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்களான சூப்பர் சக்கர் லாரிகள் மூலம் எண்ணெய் படிமம் அகற்றப்படுகிறது.

    மேலும் ஊழியர்கள் வாளிகளில் எண்ணெய் படிமத்தை அகற்றி வருகிறார்கள். இதில் கடலோர காவல்படை, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் என மொத்தம் 500 பேர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட தீயணைப்பு வீரர்களும் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    அப்பகுதி மீனவர்கள், தாமாக முன்வந்து எண் ணையை அகற்றினர். அவர் களுக்கு பாதுகாப்பு உடை கொடுக்கப்பட்டது.

    பென்ஸ்யூம் என்ற பெரிய மிதவைகளை பயன்படுத்தி கடலில் பரவிய எண்ணெய் படிமத்தை கரைக்கு இழுத்து கொண்டு வந்து அதனை வாளிகளில் அள்ளி எடுத்து வருகிறார்கள்.

    கடல் அலைகள் மூலம் எண்ணெய் படிமங்கள் கட லுக்குள் சென்று விடாதபடி தடுப்பு மிதவைகள் சுற்றிலும் அமைத்து உள்ளனர்.

    இன்று ஏராளமான ஆமைகள் கற்கள் இடையே செத்து கிடந்தன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. இறந்த ஆமைகளும் அகற்றப் பட்டு வருகிறது.

    திருவொற்றியூர் பாரதி நகர் கடல் பகுதியில் பெரிய மின் விளக்குகள் அமைக் கப்பட்டு உள்ளன. இதனால் இன்று இரவும் எண்ணெயை அகற்றும் பணி நடக்கும் என்று தெரிகிறது.

    இன்னும் 200 மீட்டர் தூரத்துக்கு எண்ணெய் பரவி கிடக்கிறது. கடலுக்குள் எண்ணெய் பரவி கிடக்கிறது என்பதை ஆளில்லா விமானங்கள் மூலம் ஆய்வு செய்கிறார்கள்.
    Next Story
    ×