search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்
    X

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாய் பயன்படுத்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கரூர்:

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாய் பயன்படுத்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கரூர் மாவட்டத்தில் போதிய பருவ மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.  ஆகவே, பொதுமக்கள் குடிநீரை தேவைக்குத் தகுந்தபடி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    கரூர் மாவட்டத்தில், பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். 

    பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவை தொடர்பான புகார்களை மேற்படி கட்டுப்பாட்டு அறையின் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்-1299 யை தொலைபேசி வாயிலாகவும் மற்றும் 04324 - 255105 என்ற தொலைபேசி எண்ணை, செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×