என் மலர்

  செய்திகள்

  கோடம்பாக்கத்தில் வாலிபர் படுகொலை - போலீசார் விசாரணை
  X

  கோடம்பாக்கத்தில் வாலிபர் படுகொலை - போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோடம்பாக்கத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  சென்னை:

  கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற சீனி (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது.

  கடந்த 20-ந்தேதி இருவருக்கும் இடையே ரங்க ராஜபுரத்தில் வைத்து மோதல் வெடித்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் சிவா சீனிவாசனை சரமாரியாக வெட்டினார். பதிலுக்கு சீனிவாசனும் திருப்பி தாக்கினார். இதில் சிவாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

  இதில் இருவரும் பலத்த காயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×