என் மலர்

  செய்திகள்

  ராணுவ வீரர்கள் பலி: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
  X

  ராணுவ வீரர்கள் பலி: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  காஷ்மீர் மாநிலத்தில் குரேஸ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி எல்லையில் நாட்டை காக்கும் உன்னத பணியை மேற்கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர் என்கின்ற சோகச் செய்தி கேட்டு மீளாத் துயரடைந்தேன். உயிரிழந்த இந்திய எல்லைகாத்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கத்தையும், அவர்களுடைய குடும்பத்திற்கு ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன். பனிச்சரிவில் உயிரிழந்த 15 வீரர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த இளவரசன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் ஆகியோரும் அடங்குவார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனையைத் தந்தது.

  தமிழக வீரர்கள் இருவருக்கும் எனது வீரவணக்கத்தையும், அவர்தம் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பிரிவை தாங்கும் வலிமையை அவர்களது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறிஉள்ளார்.
  Next Story
  ×