search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 ஆயிரம் ரூபாய் நோட்டு பதுக்கல்: சேகர்ரெட்டி உள்பட 5 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை
    X

    2 ஆயிரம் ரூபாய் நோட்டு பதுக்கல்: சேகர்ரெட்டி உள்பட 5 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை

    2 ஆயிரம் ரூபாய் நோட்டு பதுக்கல் விவகாரத்தில் கைதான சேகர்ரெட்டி உள்பட 5 பேரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    செங்குன்றம்:

    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து அதை வங்கிகளில் மாற்ற கூட்டம் அலைமோதியது.

    மேலும் ஒரு வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட அளவுக்குதான் பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் சிலர் கமி‌ஷன் கொடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெற்றதாக புகார்கள் வந்தன.

    இதையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் நாடு முழுவதும் பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி, அவரது நண்பர்கள் சீனிவாசலு, பிரேம்குமார், ரத்தினம், ராமசந்திரன் ஆகியோர் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தொழில் அதிபர் சேகர் ரெட்டி உள்பட 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு அமலாக்கத் துறையினர் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி நசீர் முகம்மது உள்பட 5 பேரிடம் புழல் சிறையிலேயே வைத்து 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    அதன்படி அமலாக்கப் பிரிவு அதிகாரி குமார் தலைமையிலான 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு புழல் சிறையில் நேற்று மதியம் 12.30 மணி முதல் சேகர்ரெட்டி உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×