என் மலர்

  செய்திகள்

  சசிகலாவுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன்
  X

  சசிகலாவுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் ஜல்லிக்கட்டு நடத்துதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு நன்றியை தெரிவித்தார்.
  சென்னை:

  தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் டாக்டர்.ராஜசேகரன் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை நேற்று சந்தித்தார்.

  இந்த சந்திப்பின் போது பேரவையின் செயலாலர் நாராயணன், இணைச் செயலாளர் பழனிவேல், துணைச் செயலாளர் ஜீவா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

  ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்தெறிந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கியதோடு, ஜல்லிக்கட்டினை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் நிரந்தரச் சட்டம் இயற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ததற்கு தங்களது நன்றியை அவர்கள் தெரிவித்தனர்.

  முன்னதாக பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரிலும், 2-ம் தேதி பாலமேட்டிலும் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வரை சந்தித்த பின்னரே தேதி முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  Next Story
  ×