search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி: அமைச்சர் காமராஜ் வழங்கினார்
    X

    திருவாரூரில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி: அமைச்சர் காமராஜ் வழங்கினார்

    திருவாரூரில் 4737 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 4737 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அவர் பேசியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 12,925 மாணவ மாணவிகளுக்கு ரூ.4. கோடியே 8 லட்சத்து 95 ஆயிரத்து 95 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாணவனுக்கு வழங்கப்படும் மிதிவண்டியின் விலை ரூ.3 ஆயிரத்து 917-ம், ஒரு மாணவிக்கு வழங்கப்படும் மிதிவண்டியின் விலை ரூ.3 ஆயிரத்து 827 மதிப்பாகும். 28 பள்ளிகளை சார்ந்த 2114 மாணவர்களுக்கும், 2623 மாணவிகளுக்கும் மொத்தம் 4737 மாணவ மாணவிகளுக்கு 1 கோடியே 83 லட்சத்து 18 ஆயிரத்து 759 ரூபாய் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. கிராமபுறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த பெண்குழந்தைகள் தங்குதடையின்றி கல்வி பயிலவேண்டும் என்பதற்காக கல்வித்துறைக்கு எண்ணற்ற பலதிட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    தமிழக அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, சீரூடை, பாடப்புத்தகங்கள், நோட்டு, உதவித்தொகை, காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சியை மாணவ மாணவிகள் பெறுவதோடு அதிக மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே சிறந்து விளங்க வேண்டும். நல்ல உயர்கல்வியை பெற்று எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் 709 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளும், ரூ.21 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் 128 மடிக்கணினிகளை அரசு பல்வகை தொழில்நுட்பக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், குடவாசல் ஊராட்சி ஒன்றிய மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2016 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளையும், 28 பள்ளிகளை சார்ந்த 2114 மாணவர்களுக்கும், 2623 மாணவிகளுக்கும் மொத்தம் 4737 மாணவ மாணவிகளுக்கு 1 கோடியே 83 லட்சத்து 18 ஆயிரத்து 759 ரூபாய் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, கமலாம்பிகை கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்டி.மூர்த்தி, திருவாரூர் மொத்த கூட்டுறவு நுகர்பொருள் சங்கத்தலைவர் கலியபெருமாள், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ரவிச்சந்திரன், மாணவ மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×