search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீத பயிர்கள் வறட்சியால் பாதிப்பு: மத்திய குழு அதிகாரி தகவல்
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீத பயிர்கள் வறட்சியால் பாதிப்பு: மத்திய குழு அதிகாரி தகவல்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் 100 சதவீதம் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வறட்சி பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய நீர்வளத்துறை இயக்குநர் அழகேசன் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வறட்சி பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய நீர்வளத்துறை இயக்குநர் அழகேசன் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயிர்பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகை வழங்கிட ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்திட 4 மத்திய கண்காணிப்பு குழுக்களின் கீழ் 10 மத்திய கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தொடக்கமாக விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், இதையடுத்து தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் மத்திய கண்காணிப்பு குழுவினர் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளோம்.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கள ஆய்வுகளின் அடிப்படை யில் 1,21,790 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், 14,421 ஹெக்டேர் பரப்பளவிலான மிளகாய் பயிர்களும், 5,496 ஹெக்டேர் பரப்பளவிலான சிறுதானியப் பயிர்களும், 4,079 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்வகைகளும், 3,348 ஹெக்டேர் பரப்பளவிலான எண்ணெய் வித்து பயிர்களும், 1,506 ஹெக்டேர் பரப்பளவிலான கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1,50,879 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு பயிர்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இது 100 சதவீதம் ஆகும்.

    இத்தகைய சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் மத்திய குழுவின் தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்கப்படும். அதனடிப்படையில் மதிப்பீடு செய்து விவசாயிகளின் நலனுக்காக விரைவில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றிடும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் திவாரி, வேளாண்மைத்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், பரமக்குடி சார் ஆட்சியர் சமீரன், பி.ஆர்.ஓ. அண்ணாதுரை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×