search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - கலெக்டர் தகவல்
    X

    ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும் உயிர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சம்பத் தெரிவித்தார்.
    சேலம்:

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஆகியவற்றை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஆகியவற்றை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 28-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் நாள் சான்றிதழை பத்திர வடிவில் கொடுத்து இருந்தால் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.

    எனவே அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் கைவிரல்ரேகை அல்லது கண் கருவிழி பதிவினை 28 -ந்தேதிக்குள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை பென்‌ஷன் பெறும் வங்கி கிளைகள், சேலம் வருங்கால வைப்புநிதி அலுவலகம், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வைப்பு நிதி அலுவலகம், தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

    உயிர் வாழ்நாள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஓய்வூதிய எண், ஆதார் நகல், வங்கி கணக்கு எண், மொபைல் போன் ஆகியவற்றை ஓய்வூதியர்கள் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை இணையம் மூலமாக 28-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். எனவே ஓய்வூதியம் பெறுபவர்கள் இக்கால நீட்டிப்பு சலுகையினை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×