search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டி - ஆறுமுகநேரியில் வீடுகளை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    கோவில்பட்டி - ஆறுமுகநேரியில் வீடுகளை உடைத்து கொள்ளை முயற்சி

    கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் வீடுகளை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சீனிவாச நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுப்பையா (60). இவர் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி ஆவர். சுப்பையா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருந்தார்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு பீரோவை உடைத்து பணம்- நகை உள்ளதா? என தேடினர். பீரோவில் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    அங்கிருந்த பத்திரங்கள் மற்றும் துணிகளை அள்ளி தரையில் போட்டு தீவைத்து விட்டு தப்பிச் சென்றனர். சுப்பையா வீட்டில் தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சுப்பையா கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஆழ்வாரப்பன் (வயது50). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் வெளியூருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டின் பின் பக்க கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்திருந்ததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர்.

    இதுபற்றி ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் சுந்தரநேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.வீட்டின் உரிமையாளர் ஆழ்வாரப்பனுக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

    வீட்டின் பின்பக்க ஜன்னலின் இரும்பு கம்பியை அறுத்து அதன் வழியாக திருடன் உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. ஆனால் பணம் மற்றும் நகைகளை வேறு இடத்தில் வைத்திருந்ததால் அவை கொள்ளை போகாமல் தப்பின. இதே போன்ற சம்பவம் இந்த வீட்டின் எதிர் வீட்டிலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×