என் மலர்

  செய்திகள்

  ஆறுமுகநேரியில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் கட்டிடத்தொழிலாளி கைது
  X

  ஆறுமுகநேரியில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் கட்டிடத்தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆறுமுகநேரியில் இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்த கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

  ஆறுமுகநேரி:

  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் பிரேம்தாஸ் (வயது 30). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பொன்செல்வி (25). 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவரும் கட்டிடத் தொழிலாளி.

  இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பொன்செல்வியின் வீட்டுக்கு சென்ற ரமேஷ் பொன்செல்வியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்தாராம். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ் பொன்செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து பொன்செல்வி ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரமேசை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

  Next Story
  ×