search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு: நாராயணசாமி தகவல்
    X

    புதுவையில் வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு: நாராயணசாமி தகவல்

    புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து, வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர் என்று நாராயணசாமி கூறினார்.

    பாகூர்:

    கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் திடலில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில், பாகூர், கன்னியக்கோவில், காட்டுக்குப்பம், மதி கிருஷ்ணாபுரம், மணப்பட்டு, பரிக்கல்பட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் பண்டிகையில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். புதுவை மதசார்பற்ற மாநிலம் என்பதால் தான் இங்கு சமத்துவ பொங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

    புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து, வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். சட்டமன்ற கூட்டத்தில் விவாதித்து, இடைக்கால நிவாரணம் குறித்து முடி வெடுக்கப்படும். அதன்பின், மத்திய அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் அறக்கட்டளை தலைவர் அசோக் ஷிண்டே, செந்தில்குமார், நாராயணன், ஜீவகணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×