search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
    X

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு

    கொதிகலன் குழாயில் பழுது, எந்திரக் கோளாறு காரணமாக வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    பொன்னேரி:

    மிஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதில் முதலாவதி நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வநத்து.

    இந்த நிலையில் முதலாவது நிலையில் உள்ள முதல் அலகில் எந்திர கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதேப்போல் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் இன்று காலை திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் அங்கும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    3-வது அலகு ஏற்கனவே பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் முதல்நிலையில் உள்ள 3 அலகுகளிலும் மின்உற்பத்தி முழுவதும் முடங்கி இருக்கிறது.

    2-வது நிலையில் மட்டும் 2 அலகுகளிலும் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எந்திரக் கோளாறு மற்றும் கொதிகலனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×