என் மலர்

  செய்திகள்

  பெற்றோர் தகராறு: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
  X

  பெற்றோர் தகராறு: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  சேலம்:

  சேலம் கிச்சிப்பாளையம் முனியப்பன் சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மகள் அஞ்சலி (வயது 15). இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். முருகனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வரும். இவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் சமாதானம் செய்தும் இவர்கள் கேட்காமல் தொடர்ந்து தகராறு செய்து வந்தனர்.

  இந்த நிலையில் நேற்றும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த அஞ்சலி வாழ்க்கை வெறுப்படைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்து மாணவியை காப்பாற்றி அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  இங்கு அஞ்சலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×