search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாவட்டத்தில் பெரிய தொகுதி: வேளச்சேரி தொகுதியில் 3,05,176 வாக்காளர்கள்
    X

    சென்னை மாவட்டத்தில் பெரிய தொகுதி: வேளச்சேரி தொகுதியில் 3,05,176 வாக்காளர்கள்

    சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி வேளச்சேரி ஆகும். அங்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 176 வாக்காளர்கள் உள்ளனர்.
    சென்னை:

    2017-ம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1.9.2016 அன்று வெளியிடப்பட்டது. 1.1.2017 அன்று தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்ய பொது மக்களிடம் படிவங்கள் பெறப்பட்டன.

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் முடிந்து இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சியில் வெளியிடப்பட்டது. மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் வெளியிட துணை ஆணையர் அன்பு செல்வன் பெற்று கொண்டார். வாக்காளர் பட்டியல் பிரதிகளை அ.தி.மு.க. சார்பில் மகிழன்பன், காங்கிரஸ் சார்பில் கராத்தே தியாகராஜன், பா.ஜனதா ஜெய்சங்கர், தே.மு.தி.க. செந்தாமரை கண்ணன் ஆகியோர் பெற்று கொண்டனர். சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி வேளச்சேரி ஆகும். அங்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 176 வாக்காளர்கள் உள்ளனர்.
    Next Story
    ×