search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க சி.பி.ஐ. நீதிமன்றம் மறுப்பு
    X

    சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க சி.பி.ஐ. நீதிமன்றம் மறுப்பு

    பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் சி.பி.ஐ. கோர்ட் தள்ளுபடி செய்தது.
    சென்னை:

    சென்னை தி.நகரை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 8-ந்தேதி சோதனை நடத்தினார்கள். அப்போது, அவரிடம் இருந்து ரூ.147 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அதில், ரூ.34 கோடி அண்மையில் வெளியான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஆகும். இதுதவிர 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில், சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, கைதானவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனித்தனியாக ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி விஜயலட்சுமி விசாரணை நடத்தினார். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட தொகை மற்றும் தங்கம் குறித்து சரியான தகவல் தெரிவிக்காதது குறித்து சி.பி.ஐ.யிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடமும், வருமானம் குறித்த விளக்கங்களை கேட்டு ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பினை ஒத்திவைத்தார்.

    அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மேலும், அவர்களை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார்.
    Next Story
    ×