என் மலர்

  செய்திகள்

  ஓசூரில் வாலிபருக்கு கத்திக்குத்து: 3 பேருக்கு வலைவீச்சு
  X

  ஓசூரில் வாலிபருக்கு கத்திக்குத்து: 3 பேருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓசூரில் வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  ஓசூர்:

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வசந்த் நகரை சேர்ந்தவர் பிரசாந்த்( வயது 26). இவர் ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

  நேற்று இரவு இவர் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். வசந்த் நகர் அருகே வரும் போது மறைந்து இருந்த 3 பேர் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் அவர்களில் ஒருவன் இவரது வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தினான். பின்னர் 3 பேரும் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டனர். இவர் என்ன காரணத்திற்காக கத்தியால் குத்தப்பட்டார் என்று தெரியவில்லை. காயம் அடைந்த அவர் ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்றார். இன்று காலை அவர் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×