search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
    X

    தஞ்சையில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

    தஞ்சையில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருபவர் செந்தில் முருகன். இவர் தஞ்சை பர்மாபஜாரில் உள்ள ஒரு கடையில் தனது டார்ச் லைட்டுக்கு எல்.இ.டி. பல்ப் வாங்கினார். இதற்கு ரூ.350-யை கடை உரிமையாளர் வாங்கியதாக தெரிகிறது.

    மற்றொரு கடையில் விசாரித்தபோது விலை மிகவும் குறைவானது என்பதை அறிந்த செந்தில்முருகன் தான் பல்ப் வாங்கிய கடைக்கு சென்று கூடுதல் விலைக்கு தன்னிடம் பல்ப்பை விற்றுவிட்டதாக புகார் தெரிவித்தார்.

    அப்போது கடை ஊழியருக்கும், செந்தில் முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்தநிலையில் கடையில் வேலை பார்த்து வரும் மாதாக்கோட்டையை சேர்ந்த இளந்தென்றல் தன்னை தாக்கியதாக கூறி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் செந்தில்முருகன் புகார் அளித்தார்.

    அதேபோல ஏட்டு செந்தில் முருகன் தன்னை தாக்கியதாக கூறி இளந்தென்றல் புகார் அளித்தார். இந்த 2 புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி செந்தில்முருகன், இளந்தென்றல் ஆகிய 2 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் ஏட்டு செந்தில் முருகன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×