என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது
  X

  ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். (வயது 52). இவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார். கடந்த 20-ந் தேதி தனது வீட்டில் சக்தி பூஜை நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

  அன்று இவரது வீட்டு முன்பு வைத்திருந்த 2 சிலிண்டர்கள் திருடு போனது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் டி.பொம்மி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த திருப்பதி மகன் விக்னேஷ்குமார் (24) என்பவர்தான் திருடியது என தெரியவரவே அவரை கைது செய்தனர்.

  போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகை அணை சாலையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் தங்க நகை மற்றும் பணத்தை திருடியதையும் ஒப்புக் கொண்டார்.

  Next Story
  ×