என் மலர்

  செய்திகள்

  செங்குன்றம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
  X

  செங்குன்றம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்குன்றம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

  செங்குன்றம்:

  செங்குன்றத்தை அடுத்த நல்லூர் பழைய விமான நிலையம் அருகே லாரியை நிறுத்திவிட்டு கிளீனர் மணிகண்டன் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார்.

  அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மணிகண்டனை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர். அந்த நேரத்தில் சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ரோந்து வந்தார். இன்ஸ்பெக்டரை கண்டதும் 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மடக்கி பிடித்து விசாரித்தார்.

  அவர்கள் செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் சமத்துவ புரத்தை சேர்ந்த மற்றொரு மணிகண்டன், பெருமாள் அடி பாதம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும் அவர்கள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

  இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

  Next Story
  ×