என் மலர்

  செய்திகள்

  ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்
  X

  ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யும் முன்னேற்பாட்டு பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
  சென்னை:

  சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், பணியாளர்களை வைத்து பள்ளம் தோண்டும் வேலையையும், அங்கு அவருக்கு நினைவகம் அமைக்கும் இதர ஏற்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
  Next Story
  ×