என் மலர்

  செய்திகள்

  சென்னை நோக்கி திரளும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள்
  X

  சென்னை நோக்கி திரளும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
  சென்னை:

  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.

  ஜெயலலிதா மறைவு செய்தியை கேள்விபட்டு, அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

  அஞ்சலி செலுத்தப்படும் ராஜாஜி அரங்கம் அருகே பொதுமக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  பேருந்து போக்குவரத்து வழக்கத்தை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அதிக அளவில் கார்களில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  முன்னதாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×