என் மலர்

  செய்திகள்

  ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு : ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார்
  X

  ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு : ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று இரவு சென்னை வருகிறார்.
  சென்னை:

  உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வரின் உடல் நலன் தேறி வருவதாக கூறப்பட்டு வந்தது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக  இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாக அப்போலோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளார். அவர் இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×