என் மலர்

  செய்திகள்

  விழுப்புரம் அருகே டிரைவர் வீட்டில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
  X

  விழுப்புரம் அருகே டிரைவர் வீட்டில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் அருகே டிரைவர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  விழுப்புரம்:

  விழுப்புரம் சேவல் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் சையது பீர்(வயது 54). கார் டிரைவர்.

  இவர் நேற்று இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைப்பதுபோல் சத்தம்கேட்டது. சத்தம் கேட்டு எழுந்த சையது பீர் பின்னால் சென்று பார்த்தார்.

  அங்கு மர்மமனிதர்கள் சிலர் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பிடிக்க சையது பீர் முயற்சி செய்தார். அப்போது அந்த மர்மமனிதர்கள் சிக்கவில்லை. தப்பிச் சென்று விட்டனர்.

  இதுகுறித்து சையது பீர் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  இதேபோல் அந்த பகுதியில் உள்ள 3 வீடுகளிலும் மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  தப்பிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×