search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    X

    உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பச்சைவழி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன்(வயது 45). தொழிலாளி.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    கடந்த 30.3.2011ல் பிச்சைக்காரன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் அந்த வீட்டுக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடினார்.

    பிச்சைக்காரன் திடுக்கிட்டு எழுந்தார். வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார். வீட்டில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி வன்கொடுமை சட்டம் மற்றும் வீட்டுக்கு தீ வைத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி.,எஸ்.டி.பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது.

    வழக்கை நீதிபதி விசாரித்து மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    Next Story
    ×