என் மலர்
செய்திகள்

கோவில்பாளையம் அருகே பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு
கோவில்பாளையம் அருகே பெண்ணிடம் 2 பவுன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் ஆதவன் அவன்யூவை சேர்ந்தவர் ராஜேந்திரபாபு. இவரது மனைவி மல்லிகா (வயது 56). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் குரும்பபாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மல்லிகா இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story