என் மலர்

  செய்திகள்

  புதுவையில் கடும் குளிருக்கு காவலாளி பலி
  X

  புதுவையில் கடும் குளிருக்கு காவலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் கடும் குளிருக்கு தொழிற்சாலை காவலாளி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்து இறந்தார்.

  புதுச்சேரி:

  கடலூர் கீழ்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது62). இவர் புதுவை சேதராப்பட்டில் உள்ள அட்டை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இந்த தொழிற்சாலையில் காவல் பணியில் ஈடுபட்டார். இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென பன்னீர்செல்வம் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்தார்.

  உடனடியாக அங்கிருந்த தொழிற்சாலை ஊழியர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். பன்னீர்செல்வம் கடும் பனியால் குளிர் தாங்காமல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

  இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் மகன் வீரராகவ பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள

  Next Story
  ×