என் மலர்

  செய்திகள்

  கோவையில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
  X

  கோவையில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் இன்று ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை:

  கோவை- வடகோவைக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் இன்று காலை ஒரு வாலிபர் திடீரென அந்த வழியாக ஒரு ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண் டார்.

  இதுபற்றி தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

  அப்போது அந்த வாலிபர் பையில் இருந்த டிரைவிங் லைசென்சை போலீசார் கைப்பற்றினர். இதில் பலியான வாலிபர் கோவை ரத்தினபுரி ஒஸ்மின் நகரை சேர்ந்த தங்கையன் (வயது 36) என தெரிய வந்தது.

  பின்னர் தங்கையன் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தங்கையன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×