search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    வட கிழக்கு பருவ மழை பெய்யாததால் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது முதல் இதுவரை எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.

    தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வடகிழக்கு பருவமழையும் சரிவர பெய்யாமல் உள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிய இன்னும் 1 மாதம் தான் உள்ளது. இந்த கால கட்டத்தில் மழை பெய்தால் தான் உண்டு.

    ஆனால் இப்போது பனி பொழிவு ஏற்பட்டுள்ளதால் மழை பெய்யாமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் தற்போது ஏரி, குளம், அணைகளில் தண்ணீர் வேகமாக வறண்டு வருகிறது. இப்போது இருக்கிற தண்ணீர் இன்னும் 1 மாதத்துக்கு கூட போதாது.

    சென்னையை பொறுத்தவரை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இது தவிர வீராணம் ஏரி, மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    பூண்டி ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 2727 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. ஆனால் இப்போது 80 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது.

    இந்த ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவது முற்றிலும் நின்று விட்டது. இதனால் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.

    இதே போல் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் தண்ணீர் இன்றி வேகமாக வறண்டு வருகிறது.

    இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை நகர மக்களுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏரிகளில் குறைவான தண்ணீர் உள்ளதால் குடிநீர் வினியோகம் சீராக வருவது இல்லை. அம்பத்தூர், கே.கே.நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 1 நாள் விட்டு தண்ணீர் வினியோகம் நடைபெறுகிறது.

    Next Story
    ×