search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று கடைசி நாள் - பெட்ரோல் ‘பங்க்’களில் அலைமோதும் கூட்டம்
    X

    இன்று கடைசி நாள் - பெட்ரோல் ‘பங்க்’களில் அலைமோதும் கூட்டம்

    மத்திய அரசு அறிவித்த செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த இன்று கடைசி நாளாக இருப்பதால் எல்லா பெட்ரோல் ‘பங்க்’களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    சென்னை:

    செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புழகத்தில் விடுவது நிறுத்தப்பட்டாலும் ரெயில், பஸ், ஆஸ்பத்திரி, பெட்ரோல் பங்க், மருந்தகங்களில் இதுவரையில் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முக்கிய இடங்களில் மட்டும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து இன்று (24-ந்தேதி வரை) பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று இரவு 12 மணி வரை அனைத்து பெட்ரோல் ‘பங்க்’களிலும் ரெயில் முன் பதிவு மையங்களிலும் பழைய நோட்டுகள் பெறப்படுகின்றன.

    செல்லாத நோட்டுகளை பயன்படுத்த இன்று கடைசி நாளாக இருப்பதால் எல்லா பெட்ரோல் ‘பங்க்’களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    சென்னையில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பிடிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். கையில் இருந்த பழைய 500 ரூபாய் மூலம் வண்டியின் முழு அளவிற்கு பெட்ரோல் நிரப்பினார்கள்.

    நகரில் எல்லா ‘பங்க்’களிலும் வழக்கத்தை விட இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. கார் வைத்திருப்பவர்கள் டீசல், பெட்ரோல் டேங்குகளை முழுவதும் நிரப்புவதை காண முடிந்தது.

    ரூ.100 சில்லரை தட்டுப்பாடு இருப்பதால் ரூ.500, ரூ.1000 முழு தொகைக்கும் பெட்ரோல், டீசல் நிரப்பினார்கள்.

    இதே போல மருந்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சர்க்கரை, இருதய, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மாதம்தோறும் மருந்துகள் வாங்குவது வழக்கம்.

    தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை இரவு வரை மட்டும் மாற்ற முடியும் என்பதால் 2, 3 மாதங்களுக்கு சேர்த்து மருந்து, மாத்திரைகளை வாங்கி இருப்பு வைத்து கொண்டனர்.

    செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வாய்ப்பு நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைவதால் மேலும் நீடிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை மத்திய அரசி டம் இருந்து வருவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிகிறது.
    Next Story
    ×