search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊதிய உயர்வு கோரி மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் நாளை நாடு முழுவதும் போராட்டம்
    X

    ஊதிய உயர்வு கோரி மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் நாளை நாடு முழுவதும் போராட்டம்

    ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    சென்னை:

    ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    இது குறித்து, மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் கூட்டமைப்பின், தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏழாவது சம்பள கமிஷன் தன் சிபாரிசுகளை 2015-ந் தேதி நவம்பர் 19-ந் தேதி வழங்கியது. ஊழியர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றாக சேர்ந்து 26 ஆயிரம் ரூபாயை குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு மாறாக வெறும் 18 ஆயிரம் ரூபாயை அடிப்படை சம்பளமாக 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்தது.

    இந்த அநீதியை எதிர்த்து ரெயில்வே, பாதுகாப்பு, தபால் உள்ளிட்ட 33 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 2016 ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து, பிரதமர் தலையீட்டின் பேரில் 3 மத்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குறைந்தபட்சம் ஊதியம் ரூ.18 ஆயிரத்தை மாற்றுவது என்றும், ஊதிய மாற்று விகிதத்தை உயர்த்துவது என்றும் உறுதி அளித்தார்கள்.

    ஆனால், 4 மாதங்கள் கடந்த பின்பும், மத்திய மந்திரிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அலவன்சுகளையும், வட்டியில்லா கடன்களையும் நிறுத்திவிட்டார்கள்.

    எனவே, மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து, நாடு முழுவதும் 7-ந் தேதி (நாளை) மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் 7-ந் தேதி காலை 10 மணிக்கு எத்திராஜ் சாலையில் உள்ள போஸ்டல் அக்கவுண்ட்ஸ் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×