என் மலர்

  செய்திகள்

  கொண்டலாம்பட்டியில் என்ஜினீயரிங் மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்
  X

  கொண்டலாம்பட்டியில் என்ஜினீயரிங் மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் என்ஜினீயரிங் மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சேலம்:

  சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

  இந்த நிலையில் அந்த மாணவி தனது உறவினரான ஆட்டோ டிரைவர் வீரமணி (24)என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதற்கிடையே இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  இந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஏற்காட்டிற்கு சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

  தகவல் அறிந்த மாணவியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் புகார் கொடுத்தார்.

  புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாணவியை கடத்தியது, பெண்கள் வன் கொடுமை சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×