என் மலர்

  செய்திகள்

  பெரியநாயக்கன்பாளையம் அருகே விபத்து: கணவன்-மனைவி பலி
  X

  பெரியநாயக்கன்பாளையம் அருகே விபத்து: கணவன்-மனைவி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியநாயக்கன்பாளையம் அருகே விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கவுண்டம்பாளையம்:

  கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சவுடாம்பிகையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தாசப்பன்(வயது 65). இவரது மனைவி மணி(60). இவர்கள் 2 பேரும் இன்று காலை 10 மணியளவில் மொபட்டில் வீரபாண்டி பிரிவு அருகே வந்தனர்.

  அப்போது எதிரே ஒரு டெம்போ வேன் வந்தது. திடீரென வேன் மொபட் மீது மோதியது. இதில் தாசப்பன், அவரது மனைவி மணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

  இதுபற்றி தெரியவந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகிறார்கள்.

  இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×