என் மலர்

  செய்திகள்

  தவளக்குப்பம் அருகே டிராவல்ஸ் அதிபரின் கார் திருட்டு
  X

  தவளக்குப்பம் அருகே டிராவல்ஸ் அதிபரின் கார் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தவளக்குப்பம் அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த டிராவல்ஸ் அதிபரின் காரை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

  பாகூர்:

  தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் ஆனந்தா நகரை சேர்ந்தவர் வெங்கட்டராமன். இவரது மகன் கோபிநாத் (வயது 26). இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

  சம்பவத்தன்று இரவு இவர், தனக்கு சொந்தமான சுமோ காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

  மறுநாள் காலையில் பார்த்த போது, காரை காணாமல் கோபிநாத் திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் காரை திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. திருட்டு போன காரின் மதிப்பு ரூ. 8 லட்சமாகும்.

  இதுகுறித்து கோபிநாத் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×