என் மலர்

  செய்திகள்

  சிவகாசியில் போதை பொருள் தடுப்பு சட்டத்தில் பெண் கைது
  X

  சிவகாசியில் போதை பொருள் தடுப்பு சட்டத்தில் பெண் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்ணை கைது செய்ய கலெக்டர் சிவஞானம் உத்தரவிட்டார்.

  விருதுநகர்:

  சிவகாசி அண்ணா காலனி நந்தவன தெருவை சேர்ந்தவர் பொன்னுக்காளை. இவரது மனைவி சண்முகக்கனி (வயது56). இவர் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சிவகாசி பகுதிகளில் விற்று வந்துள்ளார்.

  மேலும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன. இதனால் அவரை போதைப்பொருள் விற்போர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் பரிந்துரை செய்தார்.

  இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சிவஞானம் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதன் பேரில் சண்முகக்கனி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள பெண்களுக்கான தனி சிறையில் அடைக்கப்பட்டார்.

  Next Story
  ×