என் மலர்

  செய்திகள்

  விழுப்புரத்தில் டேங்கர் லாரி மோதி வாலிபர் பலி
  X

  விழுப்புரத்தில் டேங்கர் லாரி மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது டேங்கர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் சாலாமேடு இ.பி.காலனியை சேர்ந்தவர் சசிக்குமார்(வயது 25). இவர் டிப்பர் லாரியில் கிளீனராக இருந்து வந்தார். அந்த டிப்பர் லாரி பழுதானதால் விழுப்புரம்-வழுதரெட்டி புற வழிச்சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைத்திருந்தனர். அங்கு டிப்பர் லாரியில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது.

  இதையொட்டி சசிக்குமார் நேற்று இரவு அந்த ஒர்க்ஷாப்புக்கு சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் ஒர்க்ஷாப்பில் இருந்து வெளியே வந்த அவர் வழுதரெட்டி புறவழிச்சாலையை கடக்க முயன்றார்.

  அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி அவர் மீது மோதியது. இதில் சசிக்குமார் அதே இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.

  இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

  சசிக்குமாரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்தவிபத்து தொடர்பாக டேங்கர் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×